Color effects free download
Video effects
இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களின் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய effect கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய effect நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும்.
இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன்.
Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும்.
அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும்.
அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள்.
செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது.
இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
Download
Comments
Post a Comment