Aveeplayer & without water make
VOICE RECORDING
வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது. இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே voice record செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது.
VOICE CHANGER
உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்றவும் இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை robot பேசினால் எப்படி இருக்குமோ அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது.
EQ MODES
ஆடியோவில் விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாக இருக்கும். உதாரணமாக கூறினால் rock, classic இதுபோன்ற ஆடியோ filter இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும்.
Video effects
இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களின் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய effect கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய effect நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும்.
VOLUME ENVELOPE
இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷனை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது.
ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும்
Click here
Comments
Post a Comment